பரமத்தியில் அட்மா திட்ட ஆலோசனைக் குழு கூட்டம்!
நாமக்கல், டிச.8 -
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குழு கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணியின் தலைமையேற்று வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களை வரவேற்றார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில்நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்கு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத்தலைவர் தனராசு முன்னிலை வகித்தார்.
இதில் பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், கால்நடை உதவி மருத்துவர் சதீஸ்குமார், வேளாண்மை அலுவலர் பாபு, பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சோழன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சற்குணம் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்கள் துறை திட்டங்கள் குறித்து பேசினர்.
இக்கூட்டத்தில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், பயிர் அறுவடை பரிசோதகர் ஹேமாவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments