Breaking News

நாமக்கல்லில் இலவச துணிப்பை தயாரிக்கும் பயிற்சி!

நாமக்கல், டிச.8. 

பேப்பர் பை மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


இப்பயிற்சி பற்றி இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்...  

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசு பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி  நிறுவனம் ஆண் பெண் இருபாலருக்கான பேப்பர் பை மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கிறது. இந்த இலவச சுயவேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்கி 10 வேலை நாட்களுக்கு நடைபெற உள்ளது  

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 33 நபர்கள் மட்டுமே தேர்ந்தேடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

அது சமயம் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை நேரில் வந்து பூர்த்தி செய்து தருமாறு வேண்டுகிறோம். 

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர்-10 ஆம்தேதி. இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்ச கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்போர் 18 வயது மேற்பட்டும் 45 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயிற்சிக்கான செலவு, பயிற்சிகான சான்றிதழ், பயிற்சி பொருட்கள், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.  

 விண்ணப்பங்களை இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3/151, ரவின்பிளாசா, திருச்சி மெயின் ரோடு, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04286-221004 அல்லது செல்போன் எண் 9698996424. 8825908170, 8489279126 மூலம் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments