Breaking News

பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு முகாம் அறிவிப்பு... கணினியில் திருத்தம்..

காஞ்சிபுரம்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்  02.11.2021 முதல் 24.12.2021 வரை பிரதிவாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பட்டா தொடர்பான தமிழ்நிலம் மென்பொருளில் ஏற்பட்டுள்ள கணினி பிழைகளை முகாம்களிலேயே திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அதனை தொடர்ந்து இந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  29.12.2021 (புதன்) மற்றும் 31.12.2021 (வெள்ளி) ஆகிய நாட்களில் அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. 

எனவே இம்முகாம்களில் பொதுமக்கள் செவ்வனே பயன்படுத்தி கொண்டு, தங்கள் பட்டாக்களில் உள்ள கணினி திருத்தம் தொடர்பான பிழைகளை திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


1) காஞ்சிபுரம் வட்டத்தில் 29.12.2021 (புதன்) அன்று  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செவிலிமேடு அ கிராமத்திலும், 31.12.2021 (வெள்ளி) அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்  நத்தப்பேட்டை கிராமத்திலும்  கணினி திருத்தம் முகாம்கள் நடைப்பெற உள்ளது.

 2) உத்திரமேரூர் வட்டத்தில் 29.12.2021 (புதன்) அன்று  இ-சேவை மையம் கட்டிடம் மானாம்பதி கிராமத்திலும், 31.12.2021 (வெள்ளி) அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உத்திரமேரூர்  கிராமத்திலும் கணினி திருத்தம் முகாம்கள் நடைப்பெற உள்ளது.

3)வாலாஜாபாத் வட்டத்தில் 29.12.2021 (புதன்) அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் புத்தகரம் கிராமத்திலும், 31.12.2021 (வெள்ளி) அன்று  சமுதாய கூடம் வெண்குடி கிராமத்திலும் கணினி திருத்தம் முகாம்கள் நடைப்பெற உள்ளது.

 4)  திருப்பெரும்புதூர் வட்டம், 29.12.2021 (புதன்) அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சந்தவேலூர் சி கிராமத்திலும், 31.12.2021 (வெள்ளி) அன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வல்லம் கிராமத்திலும் கணினி திருத்தம் முகாம்கள் நடைப்பெற உள்ளது.

 5) குன்றத்தூர் வட்டத்தில்,  29.12.2021 (புதன்) அன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம், செரப்பணஞ்சேரி கிராமத்திலும், 31.12.2021 (வெள்ளி) அன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம், படப்பை கிராமத்திலும் கணினி திருத்தம் முகாம்கள் நடைப்பெற உள்ளது.

வெளியீடு : செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.


அதிகாரப்பூர்வ இணையதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html

No comments

Thank you for your comments