காஞ்சிபுரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
காஞ்சிபுரம், டிச.27
காஞ்சிபுரம் சங்கரமடம் எதிர்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீமங்களேசுவரர் திருக்கோயிலில் திங்கள்கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரமடம் எதிர்புறத்தில் காமாட்சியம்மன் சமேத மங்களேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும், அருளாசியின்படியும் ஸ்ரீகாமாட்சி வித்யா சமிதி மகளிர் குழு சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளிர் குழுவின் நிர்வாகி கல்பனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பூஜகர் காமேஸ்வர குருக்கள், பஞ்சுப்பேட்டை ஏகாம்பரபுரம் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.வெங்கடசுப்பிரமணியம், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் அனைவருக்கும் ஸ்ரீகாமாட்சி வித்யா சமிதி சார்பில் திருமுறை வழிபாட்டு மலர் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.ஜீவானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments