Breaking News

பாதுகாப்பின்றி சாலை விரிவாக்க பணி.. பொதுமக்கள் பெரும் அவதி...

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் லூப்ரோடு சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதேசமயம் இந்த சாலைப்பணிகள் எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இன்றி  பாதுகாப்புக்கான எந்த விதியையும் பின்பற்றப்படாமல்   பணிகள் நடைபெற்று வருகிறது.

அச்சிறுபாக்கம் பஜார் வீதிக்கு வந்து செல்லுகிற பொதுமக்கள் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவ-மாணவிகள் என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி இந்த சாலையை கடக்கின்றனர் 

சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். 

கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிற இந்த பணி இடங்களில் ஒரு சிவப்பு கொடி கூட கட்டப்படவில்லை  முன்னெச்சரிக்கை பதாகைகள் இல்லை.. வேலை நடக்கிறது என்பதற்கான பலகையோ ரிப்பனோ இல்லை... இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் எதைப் பற்றியும் சற்றும் கவலைப்படவில்லை

மாவட்ட ஆட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரை எச்சரித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது தரத்துடன் சாலை அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Thank you for your comments