டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு:
இந்திய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில் துறையன், மாவட்ட தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குமார், துரைசாமி உப்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments