தோட்டக்கலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் நிரந்தரப் பணி நியமனம்... முதல்வருக்கு நன்றி...
வேலூர்
வேலூர் மாவட்டம் தோட்டக்கலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் நிரந்தரப் பணி நியமனம் செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் கௌரவத் தலைவர் ராஜவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர் மேலும் பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டனர் இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க கௌரவத் தலைவர் ராஜவேலு கூறியதாவது,
தோட்டக்கலைத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை பணி நியமனம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் சரண்டர் விடுமுறையை மூன்று வருடங்களுக்கு நீடித்து மத்திய அரசு பல்வேறு மாநிலங்களிலும் நிறைவேற்றியுள்ளனர் இதனை தமிழக முதலமைச்சர் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும் தற்பொழுது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கி வருவது தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கம் வரவேற்பதாக கூறினார்
No comments
Thank you for your comments