Breaking News

விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்...

காஞ்சிபுரம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு  அரசு நிகழ்வுகளில் பங்கேற்று  முடித்து திரும்பும்போது காஞ்சிபுரம் அடுத்துள்ள திம்மசமுத்திரம் பகுதி கருங்கேட் அருகே அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்  விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவத்தை கண்ட  தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.


அமைச்சர் அன்பரசனின்   மனித நேய செயலைக் கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர்.இதனால் சமூக ஆர்வலர்கள் பலறும் அமைச்சரின் செயலைக்கண்டு புகழ்ந்துள்ளனர்.

No comments

Thank you for your comments