கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்கம்
ஈரோடு:
ஈரோடு வருவாய் மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகளஞ்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பி.காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் நடத்திய கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை சென்னிமலை ஒன்றிய குழு பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ அவர்கள் 18-12-2021 அன்று துவக்கி வைத்தார்கள்.
சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறுகளஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி தங்கமுத்து, காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் குமார், துறைசார்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் சென்னிமலை வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், முருகேஷ் மற்றும் ஆலாம்பாளையம் ஊராட்சி கழகச் செயலாளர் ஆறுமுகம், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், சென்னை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி கொடுமணல் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments