Breaking News

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைவருக்கு தமிழக முதல்வர் அஞ்சலி

சென்னை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ரவாத் உள்ளிட்ட வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில்  தமிழக முதலவர் முகஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் வியாழனன்று  (09/12/2021) அஞ்சலி செலுத்தினார்கள்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத், இராணுவ வீரர்கள் 11 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராணுவ, விமானப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

குன்னூரில் உள்ள ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கும் அங்கு உள்ள ராணுவ அதிகாரிகள் ராணுவ மரியாதை செலுத்தினார்கள்

தெலுங்கானா ஆளுநர் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா  ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து ராணுவப் பயிற்சி கல்லூரி மைதானத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துவரப்பட்டன.



No comments

Thank you for your comments