Breaking News

செல்லம் ஈமு பார்ம்ஸ், வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சென்னை

நாமக்கல்லில் "செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ்" என்ற நிறுவனம் பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிமையாளர்களின் அசையாச் சொத்துக்கள் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி 15.12.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.  ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

நாமக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், நாமக்கல் நகரம், மோகனூர் சாலை, கதவு எண்: 9/1, A & B என்ற முகவரியில் இயங்கி வந்த "செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ்" என்ற நிறுவனம் பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு, கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்டம் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி,  K.S.சிவக்குமார்,

திருமதி S.கனகம் மற்றும் திருமதி S.பழனியம்மாள் என்பவர்களின் கீழ்க்கண்ட விபரப்படியான அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிள்ளைகளத்தூர் கிராமம்,  புல எண். 280/3, 281/4-ல் உள்ள தலா 2360 சதுர அடி கொண்ட இரண்டு வீட்டுமனைகள் மற்றும் இராசிபுரம் வட்டம், காட்டூர், காட்டுக்கொட்டாய்,

புல எண். 307/2, 47/3-ல் 3716 1/4 சதுர அடி கொண்ட வீட்டுமனை (மனை எண்:38) ஆகிய மூன்று வீட்டு மனைகள், நாமக்கல், அதிகாரம் பெற்ற அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலரால் 15.12.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

நாமக்கல், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஏல நிபந்தனைகள் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும், ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு-II, காவல் துணைக் கண்காணிப்பாளர் மூலமாக மேற்படி சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

No comments

Thank you for your comments