போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை...!
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பொயணப்பாடி கிராமத்தில் சுமார் 500 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் இங்கு மிகவும் பிரசித்திபெற்ற பொயணப்பாடி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு கடலூர், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உட்பட பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமிதரிசனம் செய்ய வந்து செல்கிறார்கள்.
கோயிலுக்கு அடரி சாலை வழியாக வரவேண்டும் அருகிலுள்ள காஞ்சிராங்குளம், பொயணப்பாடி விநாயகாந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அடரி அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்காக இச்சாலையில் செல்வார்கள்.
தற்போது பொயணப்பாடி-அடரி செல்லும் சாலையானது குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பலவிபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதற்குமுன் பல விபத்துகள் நடந்திருக்கிறது இதனால் அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வருவதற்கும் கூட பெரும் சிரமாக உள்ளது வாகன ஓட்டிகள் தடுமாறிய நிலையில் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென மதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னால் ஊராட்சி தலைவர் கவுண்சிலருமான இரா.சம்பத்குமார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments