ஒமைக்ரான் தொற்றை கண்டறிய சிறப்பு ஆய்வகங்கள் தயார்...!
மதுரை:
கொரோனா தொற்றின் உருமாறிய புதிய வைரஸ் ஒமைக்ரானை கண்டறிய தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிறப்பு ஆய்வகங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்று பரவினால் அதற்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறினார்.
இதற்கான டெக்-பாத் கிட் 3.5 லட்சத்திற்கு மேல் கையிருப்பில் உள்ளது. கூடுதலாக 85,000 கிட்டுகள் வாங்குவதற்கு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாடு செய்து வருகிறார்.
ஒமைக்ரானை கண்டறிய தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 12 ஆய்வகங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பரவியுள்ள வைரஸ் வீரியம் குறைந்ததாக தகவல் வரும் நிலையில், ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகள் கூறுகையில், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது. ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸின் வீரியம் குறித்து சில நாட்களுக்கு பிறகே தெரிய வரும். தொண்டை வலி, உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மத்திய அரசின் வல்லுனர்களின் கருத்தின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மருத்துவத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்னன் பேட்டியில் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments