Breaking News

தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு ஆணை

சென்னை

தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு, அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Thank you for your comments