Breaking News

மின்சார டிரான்ஸ்பார்மர்களை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ க.சுந்தர்

 காஞ்சிபுரம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் இரு இடங்களில் 8 லட்சம் ரூபாய் செலவில் மின்சார டிரான்ஸ்பார்மர்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய 49வது வார்டு தும்பவனம் மற்றும் சதாவரம் பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும், அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்பட்டு மின்சாரப் பொருட்கள் பழுதாகி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.

பொதுமக்களின் புகார்கள் குறித்து தமிழக மின்சார வாரியம் காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வட்டம் தும்பவனம் மற்றும் சதாவரம் பகுதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் அளவு கொண்ட  2 மின்சார டிரான்ஸ்பார்மர்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சேகர்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செவிலிமேடு மோகன்,மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்,அன்பழகன்,விமல் தாஸ் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் சரவணன் தங்கம்,இளையராஜா,சிவானந்தம்,கிள்ளிவளவன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments