ரூ. 8 லட்சம் செலவில் டிரான்ஸ்பார்மர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் இரு இடங்களில் 8 லட்சம் ரூபாய் செலவில் மின்சார டிரான்ஸ்பார்மர்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும், அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்பட்டு மின்சாரப் பொருட்கள் பழுதாகி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.
பொதுமக்களின் புகார்கள் குறித்து அறிந்து தமிழக மின்சார வாரியம் காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் உள்ள சுந்தரி அவன்யூ மற்றும் குருகோவில் அருகே உள்ள கச்சபேஸ்வரர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் அளவு கொண்ட 2 மின்சார டிரான்ஸ்பார்மர்களை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி எழிலரசன் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் கே ஆறுமுகம், நகர வட்ட நிர்வாகிகளும் மின் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments