மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அன்னதானம்
காஞ்சிபுரம் :
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி மன்றம் சார்பில் முத்தியால்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஏற்பாட்டில் சார்பில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித் குமார் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜோதி அம்மாள், சேட்டு, டில்லி பாபு, நத்தப்பேட்டை வஜ்ரவேல், வழக்கறிஞர் ஆர்.வி.உதயகுமார், ஏரிவாய் கோபால், ஏரிவாய் வேலு, வள்ளுவபாக்கம் மாணிக்கவேல், எஸ்.ஆர்.சதீஷ குமார், பி.பன்னீர், அஜீத், மதன், பாலு, முத்தியால்பேட்டை இளங்கோ மற்றும் ஏராளமான மகளிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments