வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளையொட்டி பாஜக-வினர் மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் இந்திய பிரதமர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 97-வது பிறந்த தினமான இன்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகேயுள்ள காஞ்சிபுரம் நகர பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மேற்கு நகர தலைவர் அதிசயம் குமார் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கொடியேற்றப்பட்டு, வாஜ்பாய் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து இனிப்புகளை வழங்கி இப்பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் T. வாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, பிற மொழி பிரிவின் மாவட்ட தலைவர் மோகன்லால், நகர பொது செயலாளர் திலகர், நகர பொருளாளர் சொக்கலிங்கம், அரசு தொடர்புத்துறை நகர தலைவர் காமேஷ், மாவட்ட விவசாய அணி செயலளர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments