Breaking News

பதநீர் இறக்கி பனை வெல்லம் பணிக்கு அனுமதி கோரி மனு

சேலம்:

சேலம் மாவட்ட பனை வெல்லக் கூட்டுறவு விற்பனை சம்மேளனம் 15000 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முறையாக பதநீர் இறக்க அனுமதி மறுக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

பனை பருவ காலங்களான டிசம்பர் முதல் ஜுன் முடிய உள்ள காலங்களில் பதநீர் இறக்கி பனை வெல்லம் தயாரிக்கப்படும்.

பருவத்தின் ஆரம்ப காலமான டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்தால் தான் பனை தொழிலுக்கு ஏதுவாக இருக்கும்.... இல்லையென்றால் பனை தொழலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 

காவல்துறை அதிகாரிகளால், முறையாக தமிழக அரசின் பதநீர்  இறக்கும் உரிமம் பெற்று பனைத்தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஆவண செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம்  சேலம்  நாமக்கல் மாவட்ட தலைவர்  ஜி வெங்கடாசலம் தலைமையில் கோரிக்கை மனு  அளித்தனர்.

No comments

Thank you for your comments