‘நிம்மதி இல்லம்” என்ற முதியோர் இல்லத்தினை பயன்படுத்திகொள்ளலாம்... அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்
ஈரோடு:
போர் விதவையர்கள் நலச் சங்கத்தினால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடத்தப்பட்டுவரும் ‘நிம்மதி இல்லம்” என்ற முதியோர் இல்லத்தினை, ஈரோடு மாவட்டத்தில் வசித்துவரும் தேவையுள்ள வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் பயன்படுத்திகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
போர் விதவையர்கள் நலச் சங்கத்தினால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் “நிம்மதி இல்லம்” என்றமுதியோர் இல்லம் நடத்தப்பட்டுவருகிறது.
அதில் வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்கள் / ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன.
அதில் தங்குவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவான்ஸ் பவனில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நலதுணை இயக்குநர் அலுவலகம் மூலம் அல்லது தொலைபேசிஎண் 0424 - 2263227 மூலம் விபரங்கள் அறிந்துகொள்ளவும்.
இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தில் வசித்துவரும் தேவையுள்ள வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள்; பயனடையுமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ளவர்களும் பயன்பெறலாம்...
No comments
Thank you for your comments