சமையலர் பணிக்கு கடந்த2020 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்வுகள் ரத்து
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் சமையலர் பணிக்கு கடந்த2020 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது என்று மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக இருந்த 28 சமையலர் (ஆண்- 17, பெண்-11) பணியிடங்கள் நிரப்ப நேரடியாகவும் மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்பக அலுவலகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேற்படி விண்ணப்பதாரர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 04.01.2020 முதல் 08.01.2020 வரை நேர்காணல் நடைபெற்றது.
மேற்படி தேர்வுப் பணிகள் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாலும், கடந்த ஆண்டு (2020) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டு ஆறுமாதங்கள் கடந்துவிட்டதாலும், நிர்வாகக் காரணங்களாலும், மேற்படி சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் இரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments