ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கிட கோரி மனு..
கோவை
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக சமத்துவபடை கட்சி தலைவர் டாக்டர் பி.சிவகாமி IAS மற்றும் சமூகநீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை, குட்டையூர், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை வடக்கு வட்டங்களில் உள்ள பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிபந்தனை நிலங்கள் தற்சமயம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அந்நிலங்களை மீட்டு நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும், தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 5.45 மணியிலிருந்து 7 மணியாக மாற்றிடக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி எஸ் சமீரன்யிடம் மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments