மார்கழி மாத புகழை பறைசாற்றும் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம்
மாமல்லபுரம் :
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம் மார்கழி மாத புகழை பறைசாற்றும் வகையில் நடந்தது.
2021-2022ஆம் ஆண்டுக்கான நாட்டிய விழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. நேற்று 6-ம் நாள் விழாவில் செங்கல்பட்டு மீனாட்சி ராகவன் பரத நாட்டிய குழுவினரின் பரத நாட்டிய நிழ்ச்சி நடந்தது.
மார்கழி மாதத்தில் சிறப்பை பறைசாற்றும் வகையில் ஆண்டாள் திருப்பாவை நாடகத்தின் மூலம் மீனாட்சி ராகவன் குழுவை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர்கள் கலைநயத்துடன் வெளிப்படுத்தினர்.
சுற்றுலா வந்திருந்த பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடற்கரை கோவில் வளாகத்தில் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டுகளித்து ரசித்தனர்.
தமிழ் நாடு அரசின் சுற்றுலா துறை சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெற்றுவரும் இந்திய நாட்டிய திருவிழாவின் ஒரு பகுதியாக செங்கை விநாயக நாட்டியாலயாவின் மீனாட்சி ராகவன் அவர்களின் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி மாலை நடைபெற்றது...
No comments
Thank you for your comments