Breaking News

கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாச்சலம்

ஈரோடு :

ஈரோடு மாவட்டம, அந்தியூரில்  நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஏ.ஜி.வெங்கடாச்சலம்  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தில் சிறப்பு மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார்.

இதையடுத்து கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம்  குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



மேலும் தேர்தலில்  வாக்களித்து வெற்றி பெறச்செய்த பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தனது  நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இதில்,  அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர்  சரவணன், தொ.மு.ச. மத்திய சங்க  பொருளாளர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments