Breaking News

தூத்துக்குடியில் கொரோனா பரிசோதனைக்காக பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருப்பு!

தூத்துக்குடி, டிச.30-

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக மக்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஓமைக்ரான் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய மக்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனோ பரிசோதனைக்காக சமூக இடைவெளியின்றி மக்கள் வரிசையில் நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கூடுதல் ஊழியரை நியமித்தால் பொதுமக்கள் தாமதமின்றி பரிசோதனை செய்ய எளிதாக இருக்கும். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments