Breaking News

பைபாஸ் ரோட்டில் விதிகளை மீறும் வாகனங்கள்..

தூத்துக்குடி, டிச.30-

தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையும், மதுரை - தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் (உப்பாற்று ஓடை பாலம் அருகே) புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக, ரவுண்டானாவில் இருந்து சுமார் அரை கிமீ தூரம் சுற்றி செல்லும் வகையில், ஒருவழி பாதையாக அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், பல லாரிகள் சுற்றி செல்லாமல், விதிகளை மீறி, எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு அமைக்கப்பட்ட குறுக்கு ரோடு வழியாக அடுத்த ரோட்டுக்கு செல்வது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது.

இதனால், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அரசு பஸ்சும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது... இதையடுத்து, சுமார்  2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் பல கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்றன என்பது குறிப்பிடதக்கது.

மறுநாளே இந்த இடத்தில் (முடுக்குகாடு ஊர் அருகே) தடுப்புகள் அமைக்கபட்டும், தற்காலிக போலீஸ் பூத் அமைக்கப்பட்டன. இருப்பினும் அதனையும் மீறி லாரிகள் அடுத்த ரோட்டுக்கு திரும்புவது தற்போதும் அதிகரித்துள்ளது.

காவல் துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேம்பால வேலை முடியும் வரை அதில் காவலர் ஒருவரை நிறுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Thank you for your comments