Breaking News

கொலை குற்றவாளிகள் மூவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: 

ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுரேஷ்குமார் ( 39 ) த / பெ.ரவி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, செலையனூர் என்பவர் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள ஹவாய் கம்பெனியில் கார் ஓட்டுநராக வேலை செய்வதாகவும், 12.12.21 அன்று சுமார் 20.00 மணியளவில் வீட்டு வாசலில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரசேகர் த / பெ.கணேசன் என்பவருடன் நடுதெருவில் வசிக்கும் 1 ) தட்சிணாமூர்த்தி த/பெ.சேகர் ( எ ) மாரி , 

2 ) பிரபாகரன் த / பெ.தமிழரசு மற்றும்  

3) சிவகுமார் த / பெ.தமிழரசு 

ஆகியோர் மது போதையில் சண்டையிட்டபோது தடுக்க சென்ற சுரேஷ்குமாரை மேற்படி மூவரும் கீழே தள்ளிவிட்டு தாக்கியதில் சுரேஷ்குமார் காயமடைந்து மருத்துவமணைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

இது சம்மந்தமாக ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இவ்வழக்கில் எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர் திரு.ராஜாங்கம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிர்களான 

1 )தட்சிணாமூர்த்தி , 2 ) பிரபாகரன் மற்றும் 3 ) சிவகுமார் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

No comments

Thank you for your comments