Breaking News

ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதல் கலந்தாய்வு கூட்டம்


காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்  பொறுப்பேற்று முதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் வளாகத்திலுள்ள மாவட்ட  ஊராட்சி அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர்  படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பத்மா,ஹரி, பொற்கொடி,வனிதா, சிவராமன் ராஜலட்சுமி,ராமமூர்த்தி, பால்ராஜ்,அமுதா  செல்வம், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



No comments

Thank you for your comments