திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை... இபிஎஸ்
சேலம்.
திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற தவறிய திமுகவை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினார் .
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சிலவற்றை மட்டும் சம்பிரதாயத்திற்காக திமுகவினர் நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
கவர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.
ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி விட்டு மற்ற வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றுவோம் என்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் இரவு ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அத்துறையின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அதற்கு சான்றாக உள்ளது என்றார்.
கலெக்ஷன் கமிஷன் ஆகிய மூன்றையும் தாரக மந்திரமாகக் கொண்டு திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யாத காரணத்தினால் தமிழக விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சாபம் திமுக அரசை சும்மா விடாது என்றும் விமர்சனம் செய்தே செய்தார்.
25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது ஆனால் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டு இருந்தாலும் டீசல் விலையை குறைக்காத காரணத்தினால் தமிழகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூபாய் 190 க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை இந்த ஆட்சி காலத்தில் சிமெண்ட் ரூபாய் 400க்கு விற்கப்படுவதாகவும் அதேபோல கம்பி மணல் போன்ற கட்டுமானப் பொருட்களும் பல மடங்கு விலை உயர்வு அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை ஆகியன உயர்த்தி வழங்குவதாக கூறினார்கள் அதேபோல மக்களுக்கு பயன் பெற்று வந்த அம்மா மருந்தகம் அம்மா உணவகம் ஆகியவற்றையும் மூடி வருவது நியாயம் தானா என கேள்வி எழுப்பினார்.
அதிமுக தொண்டர்கள் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போடுவது காவல்துறையை ஏவி சோதனை நடத்துவது என எத்தகைய அச்சுறுத்தலையும் அதிமுக சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 550 கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்j உருவாகியுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அரசாங்கமாக திமுக திகழ்வதாகவும் விமர்சனம் செய்தார்.
செய்தியாளர் : எஸ் எம் பாண்டியன்
No comments
Thank you for your comments