Breaking News

இராபி பருவ பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கால அவகாசம்

தருமபுரி:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புயில், திருத்தப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் இராபி பருவ பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் இம்மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிக்கல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்ற நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவைகள் மூலமாகவோ, வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம்.  

ஏக்கருக்கு அதிகப்பட்ச இழப்பீடாக நெற்பயிருக்கு ரூ.34750, மக்காச்சோளத்திற்கு ரூ.22460, துவரைக்கு ரூ.13265, நிலக்கடலைக்கு ரூ.19650, பருத்திக்கு ரூ.11600, கரும்பு பயிருக்கு ரூ.52000, இராகிக்கு ரூ.9775-ம் வழங்கப்படும்.  

அதே போல் மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, இராகி பயிர்களுக்கு 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியும் நெல் பயிருக்கு 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியும், கரும்பு பயிருக்கு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

எனவே விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள மக்கள் கணினி மையத்தை அணுகி நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ரூ.521.25, மக்காச்சோளத்திற்கு ரூ.336.9, துவரைக்கு ரூ.198.98, நிலக்கடலைக்கு ரூ.294.75, பருத்திக்கு ரூ.579.99, இராகிக்கு ரூ.146.63 மற்றும் கரும்புக்கு ரூ.2600 செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன் பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். 


No comments

Thank you for your comments