பேருந்து நிலையத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்- பெண்மணி ஒருவர் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்மை காலமாக கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் இருந்து பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதனை தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையும்,போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.ஆயினும் பெரியவர்கள்,இளைஞர்கள் இடத்தில் மட்டும் அல்லாது பள்ளி சிறுவர்கள் இடமும் எளிதில் கிடைக்கும் வகையில் கஞ்சா அண்மை காலமாம மாறி வருகிறது.இது போன்ற கஞ்சா புழக்கத்தால் சண்டை, அடிதடி, கொலை, கொள்ளை, வழிபறி போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் நேற்று மாலை ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வழியாக தேனிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்த தகவலையெடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.டில்லிபாபு, ஆய்வாளர் வசந்தி தலைமையிலான குழுவினர் பேருந்து நிலைத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் சரக்கு பையுடன் நின்று கொண்டிருந்த பெண்மணியின் கையிலிருந்த பையினை சோதனை செய்ததில் அதில் 21கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததையெடுத்து அப்பெண்மணி அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசாரணையில் அப்பெண் தேனி மாவட்டம்,கோட்டூர் கிராமம் ஜெனிட்டா வயது 36 என்பதும் தேனி மாவட்டம் கொண்டு சென்று வியாபாரம் செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையெடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments
Thank you for your comments