பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பெரு நகராட்சி செவிலிமேடு மேட்டு காலனி பகுதிகளில் மூன்று மாதமாக குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டம்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பழைய காலனி, மேட்டு காலனி, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதகாலமாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்துள்ளனர். குடிநீர் வராதது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் செவிலிமேடு - ஓரிக்கை சாலையில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாநகரட்சி அதிகாரிகளுடன் பேசி நாள் தோறும் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததனர்.
மேலும் உடனடியாக மாநகராட்சி வாகனம் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட பெண்கள் மாநகராட்சியின் தண்ணீர் வாகனம் வாகன ஓட்டுனர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments
Thank you for your comments