Breaking News

அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்காடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் வழங்கப்படும் உணவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்கள். 

மேலும் சத்துணவு மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களையும், பள்ளியின் சுகாதார வளாகத்தையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்கள். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்பொழுது வரை 95 பழைய கட்டடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிக்கப்பட வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஃபிர்கா அளவில் வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் என அனைவரும் இக்குழுவில் இணைந்து செயல்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கட்டடங்கள் பழமையாக உள்ள கட்டடங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு பட்டியலை தயார் செய்து வருகின்றனர். 

ஏற்கனவே நம்மிடம் உள்ள 95 கட்டடங்கள் உடன் இக்குழுவின் மூலம் பெறப்பட்ட பட்டியலையும் இணைத்து தீர ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

முன்னதாகவே பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று செங்காடு கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் இங்கே ஒரு நூலக கட்டடம் ஆனது பழைய கட்டிடமாக உள்ளது அதனையும் மேலும் ஒரு சமையலறை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது அதையும் இடிப்பதற்கான ஆணையை வழங்கப்பட்டுள்ளது. 

பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒரு வாரத்திற்குள் பழைய கட்டடங்கள் இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.


No comments

Thank you for your comments