Breaking News

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனு மீது உடனடி நடவடிக்கை

ஈரோடு, டிச.20-

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.12.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலை வாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 243 மனுக்கள் வரப்பெற்றன. 

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) திரு.குமரன், உதவிஆணையர் (கலால்) திருமதி.ஜெயராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலஅலுவலர் திரு.ரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.இலாஹிஜான் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments