Breaking News

அம்பேத்கர் பெரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்துக்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சியில் அணைக்கட்டு சேரி பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி டாக்டர் அம்பேத்கர் பெரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிகெட் போட்டியில்  28 அணிகள் கலந்து கொண்டன. இதில்  வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டு சிறந்த விளையாட்டுக்கான பரிசினையும் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் பி மோசஸ் அவர்களும்,

இரண்டாவது பரிசினை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில துணைச்செயலாளர் மற்றும் காலச்சக்கரம் நாளிதழ் மாவட்ட செய்தியாளருமான ஜெ பிரேம்குமார்,

மூன்றாவது பரிசினை டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வினோத்குமார்,

நான்காவது பரிசினை அம்பேத்கர்-பெரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையாக தற்போது போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டிருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் அதற்காகவே விளையாட்டுகளை தொடங்கி எங்கள் ஊர் இளஞ்ஞர்கள் மூலம் அனைத்து விதமான போட்டிகளும் விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

No comments

Thank you for your comments