Breaking News

கொடிநாள் தினத்தையொட்டி ஆட்சியர் ஆர்த்தி தனது பங்களிப்பை செலுத்தி துவங்கி வைத்தார்...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொடிநாள் தினத்தினையொட்டி தனது பங்களிப்பை செலுத்தி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடிநாள் வசூலினை துவங்கி வைத்தார்.

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம்  தேதி படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.

இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தனது பங்களிப்பை செலுத்தி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி  துவக்கி வைத்தார்.

முன்னாதாக தேசிய மாணவர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிதியுதவி அளித்தமைக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு கொடிநாள் ஸ்டிக்கர் அணிவிக்கபட்டது.

No comments

Thank you for your comments