Breaking News

BC மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்...

தருமபுரி

 2021-22ம் ஆண்டு  முதல் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர் மரபினர்  மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,00,000/- லிருந்து  ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு  பயிலும் பிவ, மிபிவ மற்றும் சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்விஉதவித்தொகை திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனைகளுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

மேலும் 2021-22 ம் ஆண்டிற்கான முதுநிலை ( எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.ஸி., எம்.பில்., எம்.பி.ஏ., பி.எச்.டி.,)  பாலிடெக்னிக் ( டிப்ளமோ - மூன்றாண்டு  பட்டயப்படிப்பு ) , தொழிற்படிப்பு ( மருத்துவ படிப்புகளான  எம்.பி.பி.எஸ்,  கால்நடை மருத்துவம்,  பல்மருத்துவம்,  சித்த மருத்துவம் போன்ற மருத்துவ  பிரிவுகளுக்கும்,  வேளாண்மை , பொறியியல்  மற்றும் சட்டம் ) போன்ற படிப்புகளில் பயிலும் பிவ, மிபிவ மற்றும் சீம இன  மாணவ / மாணவியர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க  பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 

மேலும்  விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகம் அல்லது  பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir-bcmw@tn.ni.c.in   மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments