முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் படத்துடன் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் மனு
ஈரோடு
முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் படத்தை சாலையோர பகுதிகளில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்..
ஈரோடு மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக ஈரோடு நேதாஜி மார்க்கெட் வ உ சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி கிருஷ்ணகிரி ஓசூர் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளிலிருந்து காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றது..
கடந்த ஆட்சியில் நேதாஜி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு இடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350 க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த ஈரோடு மாவட்ட காவல் துறையினர் அதிமுக வார்டு பிரதிநிதி வைரவேல் என்பவரை கைது செய்தனர் .
மேலும் சங்கத்தை சேர்ந்த பத்து நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அதிமுகவின் பகுதி செயலாளர் முருகசேகர் (எ) முருகானந்தம் என்பவரின் படத்தை போஸ்டராக அச்சடித்து மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் ஒட்டி உள்ளனர்.
இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
அம் மனுவில், ஏற்கனவே ஈரோடு காய்கறி மார்க்கெட் பொறுப்பாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த புகாருக்கு உள்ளான முருகசேகர் என்பவரின் படத்தையும் அஇஅதிமுக வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என்றும் சட்டம் ஒழுங்கை சமூக விரோதிகள் கையில் எடுக்கின்ற செயலாக உள்ளது எனவே போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments
Thank you for your comments