Breaking News

பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம்

ஈரோடு 

பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஒன்றிய பார்வையாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எம். பரமசிவம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர்  பொன். ராஜேஷ் குமார், மாவட்ட பொதுச்செயலாளர்  ஈஸ்வரமூர்த்தி,  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த  செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் ஒன்றிய நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்டது. மேலும் 6 இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வரும் நகர்ப்புற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி இலக்கை எட்ட எவ்வாறு பாடுபட வேண்டும் என்பது பற்றியும், கிளை வாரியாக உறுப்பினர்களை சேர்த்தல், கூட்டம் நடத்துதல், மக்களின் தேவைகளை அவர்களிடத்தில் சென்று நிறைவேற்றிக் கொடுத்தல், மேலும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாகவும் வெற்றிக்கான இலக்கை எட்ட முழுமூச்சாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.

செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை மண்டல பொதுச் செயலாளர் கார்மேகம் அவர்கள் வரவேற்று வரவேற்புரை வாசித்தார்.  மண்டல பொதுச் செயலாளர் ஆ.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.

No comments

Thank you for your comments