Breaking News

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 214 நாட்கள் சிறை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க,

காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான ஜெமினி (எ) மணிகண்டன் ( 23 ) த / பெ.தட்சணாமூர்த்தி , எண்.157, பிராமணர் தெரு, சிறுவாக்கம் கிராமம், காஞ்சிபுரம் என்பவர் 110 குவிமுச - வின் படி ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 23.07.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் மேற்படி, ஜெமினி ( எ ) மணிகண்டன் என்பவர் 17.11.2021 அன்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காஞ்சிபுரம், சதாவரம், எண்.39, சத்யா நகரைச் சேர்ந்த டில்லி ( 42 ) த / பெ.நடராஜன் என்பவரை கொலை முயற்சி செய்தது சம்மந்தமாக விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். 

எனவே, மேற்படி எதிரி ஜெமினி ( எ ) மணிகண்டன் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 214 நாட்கள் சிறையில் அடைக்க 30.12.2021 அன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் .

No comments

Thank you for your comments