வியாசராஜ மடம் சோசலே பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ வித்யா ஸ்ரிச தீர்த்தர் மூல கோபாலகிருஷ்ண மஹா சமஸ்தான பூஜைகள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வியாசராஜ மடம் சோசலே பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ வித்யா ஸ்ரிச தீர்த்தர் மூல கோபாலகிருஷ்ண மஹா சமஸ்தான பூஜைகள் செய்து வழிபட்டார்.
ஜகத்குரு ஸ்ரீ மன் மத்வாச்சாரியார் மூலமகா சமஸ்தானம் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் பூர்வாதிமடம் காஞ்சிபுரம் ஸ்ரீ வியாசராஜ மடத்திற்கு சோசாலை ஸ்ரீ வித்யா ஸ்ரிச தீர்த்த சுவாமிகள் வருகை புரிந்தார் இவருக்கு மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் மேற்கொண்ட சுவாமிகளுக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்ரீமூல கோபாலகிருஷ்ணருக்கு கட்சிவாத்தான் மண்டபத்தில் மகா சமஸ்தான பூஜைகள் செய்து வழிபட்டார் இதில் மடத்தின் மேலாளர் மகேஷ்ஆச்சார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments