ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தக் கோரி ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 3000/- மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு குறைந்தபட்சம் 5000/- ஆகவும் உயர்த்தி தரக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments