Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் 32வது வார்டு விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் 32வது வார்டு விளக்கடி கோயில் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்‌ தி.மு.க.சார்பில் நகர செயலாளர் சன் பிரான்டு ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சி. வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு  பொதுமக்கள் கூறிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வாகனங்கள் திருடு போவது உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்து உடனடியாக இப்பிரச்சினைகளை சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.ஏ. சேகரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி. சீனிவாசன், செங்குட்டுவன், சந்துரு,ஜெகநாதன், கன்னியம்மாள் தேவராஜன், வெங்கடேசன், கந்தசாமி ,சிகாமணி, சுகுமார், குமரேசன், விஸ்வநாதன், மாமல்லன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments