உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு... கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் - மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி (01.12.2021) இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் - மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 01.12.2021 அன்று 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி இந்த வருடத்தில் "எச்.'ஐ.வி / எயட்ஸீடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம்''. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து கையெழுத்து பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் HIV-ஆல் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பூஜ்ஜியத்தை நோக்கி எடுத்து செல்லவும் புதிய எச்.ஐ.வி தொற்று நிலை இல்லாத நிலையை உருவாக்கவும் புறந்தள்ளுதல் மற்றும் ஒதுக்குதல் இல்லாத நிலையை உருவாக்கவும் எச்.ஐ.வி.யால் இறப்பில்லாத நிலையை உருவாக்க ஒருங்கிணைந்து பாடுபடுவோம் எனவும் சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்" என்கிற கருப்பொருளில் பொதுமக்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் 500 க்கும் மேற்பட்டோர் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா. பன்னீர்செல்வம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.V.K.பழனி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மரு.ஜீவா, துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) மரு.காளிஸ்வரி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் திரு.ப.கணேசன், எம்.பேபி, மாவட்ட மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments