Breaking News

டாலர் சிட்டியில் ... மலைபோல் குப்பை குவியல்.... நோய் பரவும் அபாயம் ...

திருப்பூர்:

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாநகரம் என்றால் டாலர் சிட்டி... தற்போது  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் பழைய பேருந்து நிலையம் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்லடம் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

கீழே உள்ள ரவுண்டானாவில் வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரவுண்டானா அருகிலேயே பயணிகளை ஏற்றிச் செல்கிறது. 

இந்நிலையில், பயணிகள் கடந்து செல்லும் பாதையில் விதிகளை மீறி தள்ளுவண்டி வியாபாரம் செய்துவருகின்றனர். இதனால் அங்கு எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம்.

அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் டேங்கில் பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீர் பைப்பினை திறந்து பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்... குழாய் இருக்கும்.... ஆனால் தண்ணீர் வராது... 

பேருந்து நிற்கும் பல்லடம் சாலையில் உணவகங்கள் இருக்கும் இடத்தில் எதிரே குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். அதன் அருகில் தனியார் மருத்துவமனை, கோவில் உள்ளன. கடந்த இரு தினங்களாக இந்த குப்பை அகற்றாமல் தேங்கி கிடக்கின்றன... மலைபோல் குப்பை குவிந்துகிடக்கின்றன..   

அதேபோன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் குள்ளி செட்டியார் வீதியிலும் குப்பைகள் நிறைந்து சாலைகளை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

தற்போது பெய்துவரும் மழையால், குப்பைகள் மழைநீரில் கலந்து சாலை முழுவதும் பரவிகிடக்கின்றன... இதனால் அப்பகுதிகள்  முழுவதும் துற்நாற்றம் வீசுகின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது... உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அங்கு மருந்து தெளிக்கவேண்டும்... என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குப்பை மலைபோல் குவிந்த பின்புதான் குப்பைகளை அகற்றுகின்றனர்... அப்படி அல்லாமல் குப்பை சேராமல் தினம் தினம் குப்பை கழிவுகளை அகற்றவேண்டும்... என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. 


No comments

Thank you for your comments