Breaking News

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

கோவை:

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி  விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது. 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் அரசால்  தடை  செய்யப்பட்ட  கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும்     மேற்படி புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக  மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள ரோஷன் காம்ப்ளக்சில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்துவருவதாக காவல் ஆய்வாளர்  முத்துப்பாண்டி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம் மற்றும் மகேந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியைச் சேர்ந்த கமாலுதின் என்பவரது மகன் சர்புதின் (38)  என்பவரிடமிருந்து சுமார் 72  கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்தனர்.

மேலும் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு அண்ணாச்சி ராவ் வீதியில் உள்ள பிரதர்ஸ் மொத்த வியாபார மளிகைக்கடையில் சோதனை செய்ததில் 18 கிலோ எடையுள்ள புகையிலைப்  பொருட்களை பதுக்கி விற்பனை செய்த தமீம் அன்சாரி என்பவரது மகன் ராபிதீன்(50) என்பவரை கைது செய்தனர்.



மேலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  உதவி ஆய்வாளர்   ஜான் ரோஸ் சூலூர் முத்து கவுண்டன் புதூர் பாலம் அருகே தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சுந்தர்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 30 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  மற்றும் இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்தனர்.

மேற்படி மூன்று நபர்களிடம் இருந்தும் மொத்தம்  சுமார் 120 கிலோ  எடையுள்ள புகையிலை பொருட்களை   பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. 

இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments