Breaking News

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கும் அவலம்... துர்நாற்றத்தால் மக்கள் அவதி... தொற்று நோய் அச்சம்...

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு கிராமத்தில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால்,  அப்பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வடி கால்வாய்  அமைக்கப்பட்டது.

இந்த கால்வாயை அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கழிவு நீரை கொண்டு விடுவதால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது அந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

இந்த கழிவு நீரில் புழுக்களும் பூச்சிகளும் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அந்த பகுதியில் கொசுக்களும் அதிகமாக இருக்கிறது.

இந்த வழியாக செல்லும் மக்கள் காற்றில் வரும் துர்நாற்றத்தை சுவாசித்து  செல்லும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது அந்த பகுதியில் 100க்க்கு மேற்பட்ட வீடுகள் இருப்பதால்  டெங்கு மலேரியா போன்ற மிகக் கொடிய நோய்கள் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகந்த அச்சத்துடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். 

இதனை உடனடியாக  சுத்தம் செய்து கழிவுநீர் விடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

மக்களின் இந்த அவல குரலுக்கு அதிகாரிகள் செவி மடுப்பார்களா... உடனடியாக  சுத்தம் செய்து சீரமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments

Thank you for your comments