Breaking News

புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு கோவில்கள் திறப்பு... அமைச்சர் சேகர் பாபு

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்  கோவில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும். பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 


தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு செய்ய வருகை தந்தார் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் பகுதியில் ஏகாம்பரநாதர் திருக்கோவில் சொந்தமான இடத்தில் சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் ரூபாய் 2 கோடியே 68 லட்சம் செலவில் வாகன நிறுத்தங்கள் உடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு   செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது, 

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்  கோவில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும்.

பக்தர்கள் நோய் பரவாமல், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் குவியாமல்  சுவாமி தரிசனம் செய்யலாம்.

ஆன்மீகவாதிகள்  மலர்ச்சியோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்றும திராவிட முன்னேற்றக் கழக அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பார்.

நிச்சயம் எங்களுடைய தாரக மந்திரம்  திருக்கோவிலுக்கு சொந்தமாக வருகின்ற வருமானங்கள் திருக்கோவிலுக்கு சென்றடைய வேண்டும் அந்த வருமானங்கள் வாயிலாக திருப்பணிகள் நடைபெற வேண்டும் திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் இதுதான் தமிழக முதல்வருடைய உத்தரவு.

ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் என்பதை இன்றைய ஆட்சி தகர்த்தெறியும், திமுக அனைவருக்கும் பொதுவான ஆட்சி என்பதை நிலை நிறுத்தும்.

திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் உடைய குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 110 அறிக்கையில் சொன்னதுபோல ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணி செய்கிறவர்களை திருக்கோவில் உடைய சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் தமிழக முதல்வர் அவர்களால் அந்த பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது என்றார்.

ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர் எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments