ஆக்கரமிப்பு அகற்ற கோரி... பொது மக்கள் சாலை மறியல்...
காட்பாடி, டிச.1-
காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகவதி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் கல்வாயை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழை நீர் வெளியேறாமல் சுமார் 250 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தேங்கி நிற்க்கும் மழை நீரை வெளியேற்றும்படியும் காட்பாடி&சித்தூர் தேசிய நெடுச்சாலையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, காட்பாடி சேர்மன் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்பு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை அனைவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
No comments
Thank you for your comments