Breaking News

சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்ட் அண்டர் பிரிணியர்ஷிப் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் சேவியர் இன்ஸ்டியூட்  ஆப் மேனேஜ்மென்ட் அண்ட்  அண்டர் பிரிணியர்ஷிப் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுரேஷ்குமார் மாணவரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார்.

அணிவகுப்பை தொடர்ந்து கல்லூரியின் சேர்மன் முத்துராமன் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்,   கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பிலிப் தனது வரவேற்புரையை ஆற்றினார்.

இவ்விழாவில் 86 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பட்டங்களை கல்லூரியின் சேர்மன் முத்துராமன் இடமிருந்து பெற்றுக்கொண்டனர்

இக்கல்லூரி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சிலர் சுயதொழிலதிபர்களாகவும் மற்றவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் சில தனித்துவம் மற்றும் சிறப்பு விருதுகள் ஊக்கத்தொகை மாணவருக்கு வழங்கப்பட்டது, கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் ஏழு வெவ்வேறு துறையிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரும் டாட்டா குழுமத்தின் இயக்குனருமான பாஸ்கர் பட் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் கல்லூரியின் குழு உறுப்பினர்கள், கல்லூரியின் தலைவர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments